search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு வேலைவாய்ப்பு"

    • டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • சென்னையில் 156 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கோவையில் 158 பேருக்கும், மதுரையில் 229 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    சென்னை:

    இந்தியா முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி நாடு முழுவதும் இன்று 9வது கட்டமாக 51 ஆயிரத்து 56 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    தபால் துறை, தகவல் தொடர்புத்துறை, வருவாய்த்துறை, நிதி சேவைகள் துறை, சுகாதாரத்துறை, நுகர்வோர் துறை, பொது கல்வி துறை உள்ளிட்ட துறைகளில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

    சென்னையில் 156 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கோவையில் 158 பேருக்கும், மதுரையில் 229 பேருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

    சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது,

    இந்த வேலை வாய்ப்பு தேசிய அளவில் நடைபெறும் போட்டி தேர்வு அடிப்படையிலானது. எனவே தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பிக்க வேண்டும். வெளிமாநிலத்தவர்கள் இங்கு அதிக அளவில் வருவதற்கு காரணம் அவர்கள் அதிக அளவில் போட்டி தேர்வை சந்திக்கிறார்கள். அதேபோல் வெளிமாநிலங்களில் பணி பெறுபவர்கள் அந்த மாநிலங்களில் உள்ள மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படியானால் தான் வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு கொள்ள முடியும் என்றார்.

    அதைத்தொடர்ந்து பணி நியமன ஆணை பெற வந்தவர்களிடம் அவர்களுடைய கருத்துக்களையும் அனுபவங்களையும் கேட்டறிந்தார்.

    • வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை.
    • முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான புதிய ஆன்லைன் மாடல் உருவாக்கப்படும்.

    சென்னை:

    கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதை செயல்படுத்த இப்போது விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

    இதன்படி வேலை வாய்ப்பகங்கள் வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான புதிய ஆன்லைன் மாடல் உருவாக்கப்படும் என்றும் இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகுந்த உத்தரவுகள் அரசு பிறப்பித்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு, கல்லூரிப்படிப்பை முடிப்பவர்கள் தங்களுடைய கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
    • கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி வரையிலான நிலவரப்படி, வேலைவாய்ப்புக்காக எவ்வளவு பேர் பதிவு செய்திருக்கிறார்கள் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து இருப்பவர்கள் எவ்வளவு பேர்? என்பது குறித்து விவரங்களை அரசு தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு, கல்லூரிப்படிப்பை முடிப்பவர்கள் தங்களுடைய கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு புதுப்பிக்கத்தவறினாலும், அவர்களுக்கு 2 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டு, வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி வரையிலான நிலவரப்படி, வேலைவாய்ப்புக்காக எவ்வளவு பேர் பதிவு செய்திருக்கிறார்கள்? என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    * 31.1.2023-ன் படி, வேலைவாய்ப்புக்காக 31 லட்சத்து 49 ஆயிரத்து 398 ஆண்களும், 36 லட்சத்து 9 ஆயிரத்து 27 பெண்களும், 273 திருநங்கைகளும் என மொத்தம் 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 பேர் பதிவு செய்திருக்கின்றனர்.

    * இவர்களில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 243 பேர், 19 வயது முதல் 30 வயதுடைய பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 56 ஆயிரத்து 606 பேர், 31 வயது முதல் 45 வயது வரை அரசுப்பணிக்காக காத்திருக்கும் வேலைதேடுபவர்கள் 18 லட்சத்து 31 ஆயிரத்து 930 பேர், 46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 185 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 734 பேர்.

    * மொத்தம் உள்ள 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 பேரில், 1 லட்சத்து 45 ஆயிரத்து 481 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள்.

    * கல்வித்தகுதிகள் வாரியாக பதிவு செய்தவர்களை பார்க்கும்போது, 10-ம் வகுப்பை கல்வித்தகுதியாக கொண்டு பதிவு செய்தவர்கள் 50 லட்சத்து 82 ஆயிரத்து 712 பேர், பட்டதாரி ஆசிரியர்களாக 3 லட்சத்து 37 ஆயிரத்து 244 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக 2 லட்சத்து 51 ஆயிரத்து 555 பேர் பதிவு செய்திருக்கிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் 31-ந்தேதி வரையிலான நிலவரப்படி, தமிழ்நாட்டில் 67 லட்சத்து 61 ஆயிரத்து 363 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவுசெய்து காத்திருந்ததாக புள்ளி விவரங்கள் வெளியாகி இருந்தன. அதனுடன் தற்போதைய புள்ளி விவரங்களை ஒப்பிடுகையில், பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதை பார்க்கமுடிகிறது.

    ×